Tuesday, December 24, 2024
HomeLatest Newsதந்தையை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் எதிர்கட்சியில் அமர்வேன்!- நாமல்

தந்தையை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் எதிர்கட்சியில் அமர்வேன்!- நாமல்

எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Recent News