Monday, January 27, 2025
HomeLatest Newsட்விட்டரை வாங்கி தவறு செய்து விட்டேன்- எலான் மஸ்க் கவலை..!

ட்விட்டரை வாங்கி தவறு செய்து விட்டேன்- எலான் மஸ்க் கவலை..!

ட்விட்டரை விலைக்கு வாங்கி தான் பெரும் தவறு செய்து விட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க் கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கினார். அதன் பின்னர் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்த அவர் முதலில் அப்போதைய ட்விட்டர் தலைமை நிர்வாகிகளை பணிநீக்கமும் செய்தார்.

இவ்வாறிருக்கையில் செய்தி நிறுவனம் ஒன்று எலான் மஸ்க்கிடம் ட்விட்டரை வாங்கியது பலன் மிக்கதாக அமைகின்றதா? என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி நிறுவனத்திற்கு இது தொடர்பாக அவர் பதிலளிக்கையில் ட்விட்டரை விலைக்கு வாங்கியது நிர்வாக ரீதியாக தவறான முடிவு எனவும் ட்விட்டரின் விளம்பர வருவாயானது குறைந்து வந்த சூழலிலே அதை வாங்கியதாக கூறியுள்ளார்.

அத்துடன் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், சமீபத்தில் ட்விட்டரின் மொத்த மதிப்பை மறுமதிப்பீடு செய்ததில் அதன் மதிப்பு 20 பில்லியன் டொலராக (ரூ.16.40 லட்சம் கோடி) உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த மதிப்பானது ட்விட்டரை தாம் வாங்கியதை விடவும் பாதி என்பதுடன் ட்விட்டரின் உண்மையான மதிப்பை காட்டிலும் இருமடங்கு தொகை கொடுத்து அதை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கூறிய எலான் மஸ்க் சில விஷயங்கள் விலை மதிப்பற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.

Recent News