Thursday, January 23, 2025
HomeLatest NewsI Love You! ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள்- வைரல் வீடியோ

I Love You! ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள்- வைரல் வீடியோ

இந்தியாவில் கல்லூரி ஆசிரியரை பார்த்து கிண்டலடித்த மாணவர்கள் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இன்டர்மீடியட் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது, இதில் மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர்.இந்த கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர்.

ஆசிரியர் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்கவில்லை, ஆசிரியரை பெயரை சொல்லி அழைப்பது, அவருக்கே தெரியாமல் போட்டோ- வீடியோ எடுப்பது என பல சேட்டைகளை செய்துள்ளனர்.

ஒருநாள் ஆசிரியர் நடந்து செல்லும் போது, ஐ லவ் யூ மேம்.. ஓய்.. மேம் ஜீ.. ஐ லவ் யூ.. மேரி ஜான்.. என்று கூறியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது, இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மீது போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Recent News