Wednesday, December 25, 2024
HomeLatest Newsமீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை எனக்கு இல்லை- மஹிந்த திட்டவட்டம்!

மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை எனக்கு இல்லை- மஹிந்த திட்டவட்டம்!

“பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு.”என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமராக மஹிந்தவை மீளவும் நியமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த வருடம் மே 9 ஆம் திகதி நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டே பிரதமர் பதவியிலிருந்து விலகினேன். அந்தக் கசப்பான சம்பவத்தை மீள நினைவுபடுத்த நான் விரும்பவில்லை.

மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் ஆசை எனக்கு இல்லை. எனினும், நாடாளுன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் அந்த நேரம் தீர்க்கமான முடிவு எடுப்பேன்” – என்றார்.

Recent News