Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsதாலியும் வேண்டாம் கணவனும் வேண்டாம்..!இளம் பெண்ணுடன் ஓட்டம் எடுத்த மனைவி..!

தாலியும் வேண்டாம் கணவனும் வேண்டாம்..!இளம் பெண்ணுடன் ஓட்டம் எடுத்த மனைவி..!

மனைவி ஒருவர் தனது கணவரோடு வாழ விரும்பாது வேறு ஒரு இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர் தாமோதரன் கௌசல்யா என்பவரை 5 ஆண்டுகளிற்கு முன்னர் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

அத்துடன், அதே ஊரில் சேகர் என்பவர் மணிமேகலா என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக 3 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில், தாமோதரனின் மனைவி கௌசல்யாவிற்கு 25 வயதாகும் நிலையில் நிலையில் 39 வயதான சேகரின் மனைவியுடன் நேற்று முன்தினம் மாயமாகி உள்ளார்.

கௌசல்யா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதுடன், கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவும் போதாது என்று தனது தாலி கயிறையும் கழட்டி கடிதத்துடன் கட்டிலின் மேல் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இவ்வாறாக இரு குடும்ப பெண்களும் மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News