Monday, December 23, 2024
HomeLatest Newsநான் திருடல! ரொம்ப அசிங்கமா இருக்குது.... பிக்பாஸிடம் கதறி அழும் தனலட்சுமி....வெளியானது ப்ரொமோ

நான் திருடல! ரொம்ப அசிங்கமா இருக்குது…. பிக்பாஸிடம் கதறி அழும் தனலட்சுமி….வெளியானது ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி கதறி அழுதுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன் தனலட்சுமிக்கு குறும்படம் போட்டு அவர் செய்த தவறை சுட்டிக்காட்டியதோடு, மிகவும் கோபமாகவும் பேசினார்.

கடந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறிய பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டைகள் ,மோதல்கள்
அரங்கேறியது. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் போட்டியாளர்களும் கடுமையாகவே நடந்து கொண்டனர்.

இதில் தனலட்சுமி ஒருபடி மேலே சென்று தவறான வழியில் பணத்தினை எடுத்து, வெற்றியும் பெற்றார். இதனை கமல்ஹாசன் குறும்படம் போட்டு வெளிச்சமிட்டதோடு, குறித்த வெற்றியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலான நபர்கள் தனலட்சுமியை நாமினேஷன் செய்துள்ள நிலையில், தனலட்சுமி பிக்பாஸிடம் வந்து ரொம்ப அசிங்கமா இருக்குது என்று கதறி அழுதுள்ளார்.

Recent News