டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை நிறுத்துமாறு தான் கூறவில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.
வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலை இக்குழு வழங்கி வந்தது.
இந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைத்து நடவடிக்கை எடுத்தார்.
ஆபத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்க கூடிய டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை எலான் மஸ்க் உத்தரவின்பேரில் அந்நிறுவனம் நீக்கியதாக தகவல் பரவியது.
ஒருவேளை அந்த சிறப்பு சேவையை திறம்பட அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என கருதினாலும் அதற்கான தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், ‘தேர் இஸ் ஹெல்ப்’ என்கிற தற்கொலை தடுப்பு அம்சத்தை ரத்து செய்ய நான் உத்தரவிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என எலான் மஸ்க் கூறியுள்ளார்.