Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஎன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது - மோடியை வெகுவாக பாராட்டிய புதின்...!

என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது – மோடியை வெகுவாக பாராட்டிய புதின்…!

ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்று 45 நிமிட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதின் இந்தியில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரஷியா அதிபர் புதின் கூறியிருப்பதாவது:-

இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை, கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். என்றும் தெரிவித்துள்ளார்.

Recent News