Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடவுளிடமே மன்னிப்பு கோரினேன் - கத்தோலிக்க திருச்சபையிடம் இல்லை – பல்டி அடித்த மைத்திரி!

கடவுளிடமே மன்னிப்பு கோரினேன் – கத்தோலிக்க திருச்சபையிடம் இல்லை – பல்டி அடித்த மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க தேவாலயத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது எழுப்பட்ட கேள்விக்கு இவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக தான், கடவுளிடமே மன்னிப்பு கோரியதாக மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, 

அவர் கோரிய மன்னிப்பை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்மே தவிர மன்னிப்பு தேவையில்லை என கத்தோலிக்க திருச்சபை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், தான் கடவுளிடமே மன்னிப்பு கோரியதாக மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News