பூனை அனைவருக்கும் பிடித்த செல்ல பிராணி. தனது தனித்துவமான குணத்தினால் பலரது மனதையும் கொள்ளை கொள்ளும் இயல்புடையது.
அந்த வகையில் பூனை ஒன்று மலேசிய பல்கலைக்கழகத்தில் டாக்டருக்கான பட்டத்தினை பெறுவதற்காக படிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அது மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலே PhD யினை முனைவர் பட்டம் பெறுவதற்காக மியாவ் மொழியில் படித்து வருவதாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் இணையத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அதற்கென சொந்த பெயர் மற்றும் மாணவர் குறியும் இருப்பதுடன் அதனுடைய மாணவர் அட்டையினை கழுத்தில் அணிந்துள்ளது.
அத்துடன், அட்டையின் மறுபக்கத்தில் பூனையின் PhD திட்டத்தின் விவரம் காணப்படுவதுடன் “மியாவ் லாங்குவேஜ் வித் ஹானர்ஸ்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக படிப்பது தொடர்பாக வித்தியாசமான ஆசையுடைய குறித்த பூனை அனைவரது மனதிலும் தனக்கென்று ஓர் இடத்தினை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.