Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsநான் மோடியின் தீவிர ரசிகன்....!எலான் மஸ்க் நெகிழ்ச்சி...!

நான் மோடியின் தீவிர ரசிகன்….!எலான் மஸ்க் நெகிழ்ச்சி…!

தான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் என்று உலகின் பெரும் பணக்காரரும், டுவிட்டர் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்றைய தினம் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் பேசிய எலான் மஸ்க், தான் பிரதமர் மோடியின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோடி, இந்தியா மீது மிகவும் அக்கறை காட்டுவதாகவும், தம்மை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் வெகு விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அடுத்த வருடம் இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வேறு பெரிய நாடுகளை காட்டிலும் இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News