Friday, January 24, 2025
HomeLatest Newsகணவரின் குறட்டை..! 8 ஆண்டுகளாக தனியாக உறங்கும் மாடல்..!வாய் பிளக்கும் இணையவாசிகள்..!

கணவரின் குறட்டை..! 8 ஆண்டுகளாக தனியாக உறங்கும் மாடல்..!வாய் பிளக்கும் இணையவாசிகள்..!

மாடல் அழகி ஒருவர் தனது கணவரின் குறட்டை சத்தம் காரணமாக 8 ஆண்டுகளாக ஒன்றாக தூங்குவதை தவிர்த்து வருவது இணையவாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் 2 பிள்ளைகளும் தாயும் மாடல் அழகியுமான கோல் ஜப்பானோவ்ஸ்கி என்பவரே இவ்வாறு தவிர்த்து வருகின்றார்.

ஜப்பானோவ்ஸ்கி, தனது கணவர் குறட்டை விடுவது சிரமமாக உள்ளதால் 8 ஆண்டுகளாக ஒரே படுக்கையில் கணவர் ஓர்வலுடன் படுத்து தூங்கவில்லை என்று சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி கணவர் விலங்குகள் போன்று தூங்குவதாகவும் அதனால் இரவு நேரத்தில் தானும், பிள்ளைகளும் சரியாக உறங்க முடியாது தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனால், கணவருடனான பரஸ்பர புரிதலின் அடிப்படையில் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் தான் தனியாக உறங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதனை பார்த்த இணையவாசி ஒருவர் கணவரை பிரிந்து படுக்கும் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையிலான உறவு எவ்வாறு உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஜப்பானோவ்ஸ்கி, தமக்குள் உறவு சரியாக இல்லை என்றாலும் ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்து வருவதாக பதிலளித்துள்ளார்.

கணவரின் குறட்டையால் அவரை பிரிந்து உறங்கும் குறித்த மாடல் அழகியை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

Recent News