Thursday, January 23, 2025
HomeLatest Newsமனைவியை 50 துண்டுகளாக வெட்டிய கணவன் - 12 பாகங்கள் கண்டுபிடிப்பு!

மனைவியை 50 துண்டுகளாக வெட்டிய கணவன் – 12 பாகங்கள் கண்டுபிடிப்பு!

மனைவியை அவரது கணவர் 50 துண்டுகளாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட், சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீடொன்றில் இருந்து சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ரூபிகா பஹாடின்(22).

இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தில்தார் அன்சாரி. பொய்யான தகவல்களை கூறி திருமணம் செய்து மனைவியை கொடூரமாக கொலை செய்யததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, போரியோ சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில்
இருந்து மனித கால் மற்றும் பிற உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், மோப்ப நாய்கள் வைத்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து எஸ்.பி கூறுகையில், “கொல்லப்பட்ட 22 வயது பெண்ணின் உடலின் 12 பாகங்கள் சாஹிப்கஞ்சில் கண்டெடுக்கப்பட்டன.

உடலின் சில பாகங்கள் காணவில்லை. அதை தேடும் பணி நடந்து வருகிறது. அவரது கணவர் தில்தார் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். இறந்தவர் அவரது இரண்டாவது மனைவி” என்றார்.

Recent News