Wednesday, December 25, 2024
HomeLatest Newsவானொலி அறிவிப்பாளர்களிற்கு வேட்டு...!உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு RJ அறிமுகம்...!

வானொலி அறிவிப்பாளர்களிற்கு வேட்டு…!உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு RJ அறிமுகம்…!

உலகின் முதலாவது AI ரேடியோ ஜாக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வானொலி நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், Al Ashley (ஆஷ்லே) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை Al Ashley ரேடியோ ஜாக்கியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

Futuri Media’s RadioGPT ஆனது புதிய AI ஹோஸ்ட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது, இது கேட்போருக்கு தினசரி ஐந்து மணிநேர பொழுதுபோக்கை வழங்கும் அதே நேரம் வானொலிகளுக்கு ஒரு தனித்துவமான தொடுதலைக் கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Futuri என்பது ஓஹியோவை தளமாகக் கொண்ட ஒரு ஊடக நிறுவனமாகும். இது RadioGPT ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுடன் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் உலகின் முதலாவது வானொலி தளமாக அறியப்படுகிறது.

அத்துடன் AI RJ க்கான ஸ்கிரிப்டை உருவாக்க, Futuri Media’s RadioGPT ஆல் மேம்பட்ட GPT-4 தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.

Recent News