“நேட்டோ உலக வரலாற்றில் மிக சக்திவாய்ந்த தற்காப்பு கூட்டணியாகும், மேலும் 75
ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூட்டணி இரண்டாம் உலகப் போரின் பின்னர் நிறுவப்பட்டது .குறித்த கூட்டணியில் சேர ஸ்வீடன் நாடு அழைப்பு விடுத்து இருந்தது . இந்நிலையில் கடந்த மாதம் துருக்கி இன் பாராளுமன்றம் அதன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர் ஸ்வீடனின் உறுப்புரிமைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத ஒரே நேட்டோ உறுப்பினராக ஹங்கேரி இருந்தது.
ஸ்வீடனின் நேட்டோ அணுகல் செயல்முறைக்கு ஹங்கேரிய பாராளுமன்றம் ஒப்புதல்
அளித்ததை அமெரிக்கா வரவேற்கிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்களன்று தெரிவித்தார்.ஹங்கேரியும் ஸ்வீடனும் சுமார் இரண்டு ஆண்டுகாலத்திற்கு முன்பு ஓர் விரோதப்போக்கில் இருந்து வந்த நிலையில் தற்போது ஒருவருக்கொருவர் சமரசம் செய்து வருகின்றனர் .
நேட்டோவின் புதிய உறுப்பினராக சுவீடனை ஏற்றுக்கொள்ள நாடாளுமன்றம் திங்களன்று வாக்களிக்க அழைத்தது . ஹங்கரியும் ஸ்வீடனும் நேட்டோ வருவதற்கு சார்பாக வாக்களித்தது.இதேவேளை, ஹங்கேரி நான்கு புதிய ஸ்வீடிஷ் தயாரிக்கப்பட்ட JAS 39 கிரிபன் ஜெட் விமானங்களை வாங்கும் ஒரு ஒப்பந்தத்தில் அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.