Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsநூற்றுக் கணக்கான மனித டைனோசர்கள்; கனடாவில் கின்னஸ் சாதனை!!!

நூற்றுக் கணக்கான மனித டைனோசர்கள்; கனடாவில் கின்னஸ் சாதனை!!!

கனடாவில் கின்னஸ் சாதனை முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பேர்ட்டாவின் ட்ரம்ஹில்லர் பகுதியில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.டைனோசர் ஆடைகளை முழுமையாக அணிந்து ஒன்றுகூடுதலில் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முழு உடலையும் மூடக்கூடிய வகையில் டைனோசர் ஆடைகளை அணிந்து, அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஒன்றுகூடிய நிகழ்வாக 2019ம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. ட்ரம்ஹில்லரில் சுமார் 1100 பேர் டைனோசர் ஆடைகளை அணிந்து ஒன்று கூடியிருந்தனர்.இந்த கின்னஸ் சாதனை முயற்சி இதுவரையில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News