Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகரை ஒதுங்கியுள்ள நூற்றுக்கனக்கான திமிங்கலங்கள் !!!

கரை ஒதுங்கியுள்ள நூற்றுக்கனக்கான திமிங்கலங்கள் !!!

அவுஸ்திரேலியா(Australia) கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கலங்கள் காலை கரை ஒதுங்கியுள்ளன.

இதன்போது ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்ததோடு, மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் உயிரியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து மற்றைய திமிங்கலங்கள் வரிசையாக கரையில் வந்து சிக்கி இருக்கலாம் என அந்நாட்டு கடல்வாழ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recent News