Saturday, January 11, 2025
HomeLatest NewsWorld Newsமனித இனத்திற்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்' - எலான் மஸ்க் விருப்பம்..!

மனித இனத்திற்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்’ – எலான் மஸ்க் விருப்பம்..!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர்(எக்ஸ்) நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வரும்  எலான் மஸ்க். தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு நகரங்கள் இருக்க வேண்டும் என எலான் மஸ்க் , தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “மனிதர்கள் நிலவில் தரையிறங்கி 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக மனிதர்கள் நிலவில்
தரையிறங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மனித இனத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது.

மனித இனத்திற்கு நிலவில் தளம் இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே பயணிக்க வேண்டும்.”என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

Recent News