Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsதமது தலையை தாமே துண்டித்து நரபலி - தம்பதியின் தாமரை பூஜை..!

தமது தலையை தாமே துண்டித்து நரபலி – தம்பதியின் தாமரை பூஜை..!

இளம் தம்பதிகள் தமது தலையை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த ஹேமுபாய் மக்வானா (38) , ஹன்சா பென்(35) என்ற தம்பதி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வசித்து வந்துள்ளனர். இவர்களிற்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்துள்ளதுடன் இவரும் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வீட்டில் நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்துள்ளதுடன், மறுநாள் காலை தமது தலையினை துண்டித்து இறந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்ற பொழுது பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது. தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக இந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சம்பவ நாள் அன்று கமல பூஜைக்காக ஹோமம் வளர்த்து அந்த இந்திரத்தில் தலையை தலையை வைத்து பின்னர் அதை இயக்கி தலை துண்டாகி அது உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக அதை அமைத்துள்ளனர்.

அத்துடன் அங்கு கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில் தமது குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் தாமரை பூஜை செய்ய என்ன காரணம்? இந்த சடங்கிற்கு யாரேனும் அவர்களை தூண்டினார்களா? எந்த நோக்கத்திற்காக இந்த பூஜை செய்யப்பட்டது? என பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறாக தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News