Monday, May 6, 2024
HomeLatest Newsகம்போடியாவில் மனித உரிமைகள் கவலைக்கிடம் : ஐ.நா செய்தியாளர் கவலை!

கம்போடியாவில் மனித உரிமைகள் கவலைக்கிடம் : ஐ.நா செய்தியாளர் கவலை!

கம்போடியாவிற்கு 11 நாள் பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் தென் கிழக்கு பிராந்திய செய்தியாளர் “விட்ட் முண்டர்போர்ன்”, கம்போடியாவின் அரச தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றுடன் சுதந்திரமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

“கம்போடியா ஒரு ஐனநாயக நாடு. இருந்த போதிலும் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ஒற்றையாட்சியே நிலவுகின்றது.

குறிப்பாக,நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒற்றையாட்சியினால் பல அரசியல் ஒடுக்கு முறைகளும், அரசியல் பழிவாங்கல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

மக்களுக்கான சுதந்திரம் மற்றும் தனி மனித உரிமைகள் என்பன ஒற்றையாட்சியின் கீழ் மறுக்கப்பட்டு வரும் நிலை அவதானிக்கப்படுகின்றது. இந்த சூழலில் நாம் கம்போடியாவின் பிரதமர் “ஹுன் சென்னின்” அவர்களை சந்தித்து சில விடயங்களை எடுத்துக் கூறி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த பேசிய போது அவற்றிற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த வகையில் கம்போடியாவின் அரசியல் கட்டுப்பாடுகளையும், மற்றும் மனித உரிமை ஒடுக்கு முறைகளையும் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள் ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் கம்போடியாவில் சிறந்த ஐனநாயக ஒடுக்கு முறையற்ற அரசை உருவாக்க முடியும்” என ஐ.நாவின் செய்தியாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News