ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்து ஒய்வு பெற்றுச் செல்லும் “மிச்செல் பாச்சிலெட்” தனது பிரியாவிடையின் போது வெளியிட்ட இறுதி அறிக்கையில் பல விடயங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளதாகவும் அந்த வகையில் மிக முக்கியமான விடயமாக சீனாவின் ‘ஜின்ஜியாங்’ பிராந்தியத்தில் அதிகமாக வசிக்கம் ‘உய்குர்’ மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லீம் இன மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை எனவும் மனித படுகொலை, பாலியல் வன் கொடுமைகள் உட்பட பல மனித குல பேரழிவுகள் மேற்படி பிராந்தியத்தில் நடைபெற்று வருவதாகவும், இந்த பிராந்தியம் சீனாவின் சர்வாதிகாரத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒரு பிராந்தியமாக காணப்படுவதாகவும், இந்த பிராந்தியத்திற்குள் எந்த வெளிநாட்டு ஊடகங்களோ அல்லது சர்வதேச அமைப்புக்களோ அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்த மிச்செல் பாக்லெட், இந்த விடயம் குறித்து சீன அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறு எதுவும் இல்லை என்ற மறுப்பே தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.