Tuesday, December 24, 2024
HomeLatest Newsஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஹெல்மெட் தீவிரவாதிகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஹெல்மெட் தீவிரவாதிகள்

போராட்டம் என்ற பெயரில் எதிர்வரும் 9ஆம் திகதி பாரிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நாம் மதிக்கிறோம். ஆனால், இதுபோன்ற அரசியல் செயற்பாடுகளை போராட்டம் என கூற வேண்டாம்.

மேலும், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று அதனூடாக ஆட்சியை கைப்பற்றுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டு மக்களை வரிசைகளின் நிற்க வைக்கவே எதிர்க்கட்சி திட்டமிடுகிறது.

தலைக்கவசம் அணிந்தவர்கள் இந்த வரிசைகளுக்குள் சென்று வன்முறை சம்பவங்களை தூண்டுகிறார்கள் .
இந்த தலைக்கவச குழுக்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

போராட்டத்தின் போது தலைக்கவசம் அணிந்த எவராவது எரிபொருள் நிரப்பு நிலையங்களை கொளுத்தினாலோ அல்லது வேறோர் இடங்களில் தீயை பற்ற வைத்தாலோ ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும் என்றார்.

Recent News