Thursday, January 23, 2025

டாடா நியூ ஆப் விமர்சனம் | Tata Neu பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது

Tata Digital நிறுவனம் கடந்த பல மாதங்களாக இந்த செயலியின் வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூப்பர் ஆப் மூலம்,
பணப் பரிமாற்றம் தொடங்கி டிக்கெட்டிங் வரை அனைத்து விதமான ஆன்லைன் செயல்பாடுகளில் கால் பதித்துள்ளது.

டாடா குழுமம் இறுதியாக அதிகம் பேசப்படும் Tata Neu செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே செயலியின் வாயிலாகப் பயனர்கள் பல அம்சங்களைப் பெறுவார்கள். ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் இதில் உள்ளது.
டாடா குழுமத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் செயலியான Tata Neu இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு சூப்பர் ஆப் போல வேலை செய்யும். இந்த ஒற்றை செயலியில், பயனர்கள் மளிகை பொருள்கள், மின்னணு சாதனங்கள், உணவு விநியோகம், ஹோட்டல், விமான முன்பதிவு ஆகியவற்றை பதிவு செய்ய முடியும்.

ஐபிஎல்லை இலவசமாகப் பாருங்கள்
ஐபிஎல் 2022 இன் ஸ்பான்சர் டாடா என்பது நீங்கள் அறிந்தது தான். எனவே நிறுவனம் பயனர்களுக்கு ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க
இலவச டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. போட்டியை இலவசமாகப் பார்க்க, நீங்கள் டாடா நியூவின் இன்ஸ்டாகிராம்
பக்கத்திற்குச் சென்று நியூ வினாடி வினா போட்டியில் பங்கேற்று பதிலளிக்க வேண்டும். சரியாக பதிலளிக்கும் பயனர்களுக்கு போட்டி டிக்கெட்டுகள்
இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos