Friday, January 24, 2025

டிஜிட்டல் மோசடியில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வங்கிக்கணக்கின் தனிப்பட்ட விவரங்களான யூசர் ஐடி, லாகின் ID அல்லது பாஸ்வேர்டு, டிரான்சாக்ஷன் பாஸ்வேர்டு, OTP, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களான PIN, CVV, டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த விவரங்களை யாருடனும் எந்த சூழலிலும் பகிரக்கூடாது.

அடுத்ததாக, KYC ஐ புதுப்பிக்க வேண்டும் என்ற போலியான அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும். மோசடியாளர்கள் மற்றும் ஹேக்கர்கள் உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல், அடையாள சான்றுகள், வசிப்பிட முகவரி உள்ளிட்ட தகவலைப் பெற, மொபைல் அழைப்பு அல்லது மின்னஞ்சல் வழியே KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். எனவே, இது மாதிரியான அழைப்புகளை எப்போதும் நிராகரித்து விடுங்கள்.

வங்கியின் அதிகாரபூர்வமான வலைத்தளம் மற்றும் செயலி உள்ளன. அதே போல, பல்வேறு பேமெண்ட் நெட்வொர்க்கும் அதற்குரிய செயலிகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் தவிர்த்து, வேறு எந்த செயலி அல்லது லிங்க்கைப் பயன்படுத்த வேண்டாம்.
பண பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பிட்ட வரம்பை அமைக்கலாம். அந்தத் தொகைக்கும் அதிகமாக பணத்தை எடுக்கவோ அல்லது டிரான்ஸ்ஃபர் செய்யவோ கூடாது என்பதை நீங்கள் செயல்படுத்தலாம்.

மின்னஞ்சல் வழியாகவும், செயலியிலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் உங்கள் கணக்கு அல்லது வாலெட்டின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் நோட்டிஃபிகேஷன் வருமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

இதனைப் பற்றி மேலதிக தகவலுக்கு மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos