Tuesday, December 24, 2024
HomeLatest Newsதமிழர்கள் பலவருடங்களாக கேட்டும் தராத அரசாங்கம் - எவ்வாறு சீனாவிற்கு வழங்குகின்றது? - கால்நடை வளர்ப்போர்...

தமிழர்கள் பலவருடங்களாக கேட்டும் தராத அரசாங்கம் – எவ்வாறு சீனாவிற்கு வழங்குகின்றது? – கால்நடை வளர்ப்போர் சங்கம் கேள்வி!

தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்தும் தமது தேவைகளை பூர்த்தி செய்யாத அரசாங்கம் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு காணிகளை வழங்குவதற்கு முனைப்பு காட்டுவதாக கிளிநொச்சி கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வைரமுத்து கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.உண்மையான தேவையுடைய தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்காமல், சீனா உள்ளிட்ட நாடுகளிற்கு காணிகளை வழங்குவதந்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல்வாதிகள் ஊடாக அறிகின்றோம்.

இங்குள்ள பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது, சீனாவிற்கும், வெளி மாவட்டத்தில் உள்ளவர்களின் சில தேவைகளிற்கும் விரைவாக காணி வழங்குவதில் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் கவலை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகாலத்திலும், அற்கு பினனரான 13 வருடங்களாக தமக்கான மேச்சல் தரை ஒன்றை தாருங்கள் என கேட்டு வருகின்றோம். இவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் பலமுறை கேட்டுள்ளோம்.

ஆனால் இன்றுவரை மேச்சல் தரை இல்லாமல் பல்வேறு சவால்களிற்கு நாங்கள் முகம் கொடுக்கின்றோம். இதனால் எமது உற்பத்திகள் குறைந்துள்ளது. நாங்கள் கால்நடை வளர்ப்பதில் பாரிய சவால்களிற்கு முகம் கொடுக்கின்றோம்.

54ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் இரணைமடு குளத்திற்கு தெற்கு பகுதியில் சுரியபுரம் எனும் இடத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் கால்நடைகள் மேச்சலிற்காக விடப்பட்டு வந்தது. அதன் பின்னர் அரசாங்கம் தமது தேவைக்காக அவற்றை மீள பெற்றுள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட தேவைகளிற்கான அப்பகுதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Recent News