Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்: இலங்கையில் இணைய சேவை முடங்கும் அபாயம்!!!

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்: இலங்கையில் இணைய சேவை முடங்கும் அபாயம்!!!

யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் செல்லும் இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.பாப் அல்-மண்டேப் நீரிணையில் (Bab al-Mandeb Strait) உள்ள நான்கு இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான இணைய சேவைகளில் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையிலும் இணைய சேவைகள் பாதிப்படையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.ஹூதி கிளர்ச்சியாளர்கள் என உறுதிப்படுத்திய சீகொம் (Seacom) நிறுவனம்,ஹூதி கிளர்ச்சியாளர்கள் சீகொம் (Seacom), AAE-1,EIG மற்றும் TGN ஆகிய நிறுவனங்களின் இணையத்தள கேபிள்களையே சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சீகொம் (Seacom) உறுப்படுத்தியுள்ளது.

இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான இணையத் தொடர்புகளில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.இதனையடுத்து இணையத்தள வசதிகளை மீள் மறுசீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சீரமைப்பது சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது. இணையத்தள பாவணையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Recent News