அண்மையில் அச்சிடப்பட்ட முத்திரைகளில் நந்துங்கமுவ ராஜா முத்திரை, நெலும் குளுன முத்திரை மற்றும் கொவிட் முத்திரை ஆகியவை குறுகிய காலத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக தபால் மா அதிபர் ஏ.டி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தலா மூன்று லட்சம் முத்திரைகள் அச்சிடப்பட்டதாகவும், அவை அச்சடிக்கப்பட்ட ஒரு வருடத்தில் குறுகிய காலத்திற்குள் முழு முத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நந்துங்கமுவ ராஜாவின் முத்திரை 15 ரூபா பெறுமதியிலும், தாமரை கோபுர முத்திரை 45 ரூபா பெறுமதியிலும் அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், தபால் துறைக்கு தாமரை கோபுர முத்திரை மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.