Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது -கடும் எச்சரிக்கை..!

பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது -கடும் எச்சரிக்கை..!

சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது. மேலும் தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறுகையில், ” காசா போராளிக் குழுவை ஒழிப்பதற்கான இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும். இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் அல்லது நேரடி இராணுவ நடவடிக்கைகள் பணயக்கைதிகளை விடுவிக்காது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை.
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் ” என தெரிவித்துள்ளார்.

Recent News