Monday, December 23, 2024
HomeLatest Newsஹனிமூன் செல்லவில்லையாம்! மணமகனுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா

ஹனிமூன் செல்லவில்லையாம்! மணமகனுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா

பிரபல நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்து ஹனிமூன் செல்லாமல் ஷீட்டிங்க்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவரின் நடிப்புத்திறனால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியதை அடுத்து இவரின் கணவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் இவர் திருமணம் செய்யப்போகும் நபர், ஏற்கனவே ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை தான் திருமணம் செய்திருந்தார் எனவும் அவர்களின் திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றிருந்தார் எனவும் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவரின் திருமண ஏற்பாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னரே ஆரம்பமாகியுள்ளது. மேலும் இவர்களின் திருமணம் Mundota Fort and Palaceல் இன்றைய தினம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

திருமணம் முடிந்ததும் ஹன்சிகாவிற்கு பிரபல விளம்பரமொன்றிற்கு ஷீட்டிங் இருப்பதாகவும் இதற்காக டிசம்பர் 6 ஆம் திகதி மும்பைச் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ஹனிமூன் ஷீட்டிங் முடிய தான் என கண்டிப்பாக தெரிவித்துவிட்டாராம்.

Recent News