Sunday, January 12, 2025
HomeLatest Newsஇலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள்! – மோடியிடம் விசேட கோரிக்கை

இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள்! – மோடியிடம் விசேட கோரிக்கை

இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஆராய, இந்திய மத்திய அரசாங்கம், அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அழைக்கவேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது.

காங்கிரஸின் சிரேஸ்ட தலைவர்களின் ஒருவரான அட்ஹிர் ரஞ்சன் சௌத்ரி இந்த கோரிக்கையை, பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கருதி இந்த கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பதே அவரின் காரணமாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கான செயற்பாட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இலங்கையில் தற்போது தொடரும் பிரச்சினைகள் காரணமாக அகதிகள் இந்தியாவுக்கு வரக்கூடும் என்றும் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

Recent News