Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇந்து மத சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்...!பிறப்பிக்கப்பட்ட உத்தரவு...!

இந்து மத சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்…!பிறப்பிக்கப்பட்ட உத்தரவு…!

இந்து மத சிறுமி ஒருவரை கடத்தி சென்று மதம் மாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணம் டன்டோ அல்லாஹ்யார் பகுதியில் வசிக்கும் ரவீணா மேக்வால் என்ற இந்து சிறுமி சில நாட்களிற்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார்.

அதனால், பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த நிலையில், பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காக போராடும் பாகிஸ்தான் தாராவர் இத்தேஹத் என்ற அமைப்பும் புகாரளித்துள்ளது.

சிறுமி தனது விருப்பத்தின் அடிப்படையிலே முஸ்லிம் மதத்திற்கு மாறியதாகவும், ஜமோ கான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் சிறுமியை கடத்தி சென்ற குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கராச்சிக்கு தனிப்படை பொலிசாரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டு மிர்புர்காஸ் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை ஜமோ கான், திருமண சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்.

ஆயினும், அவரது தேசிய அடையாள அட்டையை கேட்ட போது அவரிடம் ஆப்கானிஸ்தான் அடையாள அட்டையே இருந்தமையால் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

அத்துடன், நிருபர்களிடம் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி கராச்சியில் ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றி ஜமோ கானுடன் திருமணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வாசித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதுடன் பெற்றோரிடமும், உறவினரிடமும் சிறுமி பேசுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recent News