Monday, January 27, 2025
HomeLatest Newsஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஜூலை 18ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Recent News