Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேலின் Beit Hillel இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது..!

இஸ்ரேலின் Beit Hillel இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது..!

லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள கிரியாத் ஷ்மோனா நகருக்கு கிழக்கே இஸ்ரேலின் பீட் ஹில்லெல் இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அதில் உயிரிழப்புகள் உறுதி படுத்தப்பட்டுள்ளது என்றும் லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா கூறியுள்ளது.

அந்த குழு வெளியிட்ட அறிக்கையின்படி, ” பிக்ரத் ரிஷா தளத்திற்கு அருகாமையில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் தாக்கப்பட்டனர். மிடாட் படைமுகாமிற்கு அருகில் இருந்த எதிரி வீரர்களை நாங்கள் தகுந்த ஆயுதங்களுடன் குறிவைத்தோம்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தெற்கு லெபனானில் இருந்து எட்டு ஏவுகணைகள் வடக்கு இஸ்ரேலின் மேல் கலிலி பகுதியில் உள்ள சாசா குடியேற்றத்திற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய இராணுவ தளங்களை நோக்கி ஏவப்பட்டன.

இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் ஒரே இரவில் ஹெஸ்பொல்லாவுக்கு சொந்தமான தளங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News