Friday, January 24, 2025
HomeLatest Newsகூகுள் மேப்ஸ் செயலி பற்றி இதுவரையில் நாம் அறிந்திடாத சுவாரஸ்யமான ட்ரிக்ஸ்!

கூகுள் மேப்ஸ் செயலி பற்றி இதுவரையில் நாம் அறிந்திடாத சுவாரஸ்யமான ட்ரிக்ஸ்!

கூகுள் மேப்ஸ் செயலியை வழித்தடங்களை அறிந்துகொள்வதற்காக பயன்படுத்துகிறோம், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான ட்ரிக்ஸ் இந்த செயலியில் உள்ளது.  

1) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலான மக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் இது பயனர்களுக்கு இடையில் பல நிறுத்தங்களைச் சேர்த்து சிறந்த வழியை பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. 

அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும், ஆனால் வழியில் எங்காவது நிறுத்த வேண்டும் என்றால் அதை கூகுள் மேப்ஸில் சேர்க்கலாம்.  இந்த வழியில், நீங்கள் விரும்பும் பல நிறுத்தங்களைச் சேர்க்கலாம். இதைச் செய்ய, லொகேஷனை தேடி, டைரெக்ஷன்ஸ் என்பதை டேப் செய்யவும்.  இப்போது, ​​மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டி, ‘Add stops’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2) சாலை வழியாக செல்கிறீர்கள் என்றால் அந்த வழியில் நீங்கள் செலுத்த வேண்டிய சுங்க சாவடிகளின் மொத்த கட்டண விவரத்தை கூகுள் மேப்ஸ் காண்பிக்கும்.  இதற்கு, செட்டிங்சில் இருந்து ஷோ டோல் ப்ரைசஸ் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

3) பிளஸ் குறியீடு என்பது உங்கள் இருப்பிடத்தின் உண்மையான முகவரியை ஒருவருடன் பகிராமல் இருப்பதற்கான மாற்று வழியாகும்.  பிளஸ் குறியீட்டை உருவாக்குவது எளிது, இது வெவ்வேறு வாயில்கள், நுழைவுப் புள்ளிகள் மற்றும் பல போன்ற குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிட அனுமதிக்கிறது, 

4) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை பயனர்கள் தெரிந்துகொள்ள முடியும்.  மேப்ஸில் இடத்தை தேர்வு செய்து வலது கிளிக் செய்து தூரத்தை அளவிடவும், அது தானாகவே மொத்த தூரத்தைக் காண்பிக்கும்.

5) கூகுள் மேப்ஸ் பொதுவாக கார்கள், பைக்குகள் மற்றும் நடைப்பயிற்சிக்கான ஓட்டுநர் திசைகளை வழங்குகிறது.  இருப்பினும், மெட்ரோ, சுரங்கப்பாதை மற்றும் பிற பொதுப் போக்குவரத்துக்கான வழியைக் கண்டறியும் இது உதவுகிறது.  இதனை செய்ய ஒரு லொகேஷனை தேடி, டீட்டெயில்ஸ் பக்கத்தை விரிவுபடுத்தி, ‘Public transport nearby’ பகுதியை தேர்வு செய்து பார்க்கலாம்.

6) நம்மில் பெரும்பாலோர் வண்டியை எங்கு பார்க் செய்தோம் என்பதை மறந்துவிடுவார்கள், இதற்கு உங்களுக்கு கூகுள் மேப்ஸ் உதவுகிறது.  உங்கள் பார்க்கிங்கைக் காட்டும் நீல நிற ஐகானைத் தட்டி, பாப்-அப் மெனுவிலிருந்து பார்க்கிங்கைச் சேமிக்கவும்.

7) நாம் செல்லக்கூடிய அல்லது செல்லத் திட்டமிடும் இடத்திற்கான பார்க்கிங் நிலையை கூகுள் மேப்ஸ் நமக்கு காண்பிக்கும், இதற்கு லொகேஷனை தேடி டீட்டெயில்ஸ் பக்கத்தை விரிவுபடுத்தி ‘P’ ஐகானைத் தேர்வு செய்து பார்க்கலாம்.

8) பார்க்கிங் நிலையைப் போலவே, கூகுள் மேப்ஸ் உங்களுக்கு ட்ராஃபிக் நிலைமைகளை முன்னரே அறிவிக்க உதவுகிறது, மேலும் ட்ராஃபிக் உள்ள இடத்தைப் பார்வையிட்டு நேர மேலாண்மைக்கும் உதவுகிறது.

9) நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரத்தை கூகுளிலிருந்து மறைக்க விரும்பினால் இன்காக்னிடோவை தேர்வு செய்யலாம்.  இதனை நீங்கள் இயக்கினால் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதற்கான தர்வாவுகள் கூகுளில் சேமிக்கப்படாது.  மேல் வலது மூலையில் உள்ள உங்கள் அவதாரை க்ளிக் செய்து அதை இயக்கலாம்.

10)  ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை அல்லது பிற இசை ஸ்ட்ரீமிங் சேவையை ஒருங்கிணைக்கவும் வழிசெலுத்தும்போது காண்பிக்கப்படும் தங்களுக்கு விருப்பமான இசை ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒருங்கிணைக்க கூகுள் மேப்ஸ் அனுமதிக்கிறது.

11) கூகுள் மேப்ஸ் வழங்கும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் நீங்கள் விரும்பும் உணவகத்தின் மெனுவைச் சரிபார்க்கும் திறன் ஆகும்.  உணவகங்களைத் தேடி முழுமையான மெனுவைப் பார்க்க ‘மெனு’ அல்லது ‘சேவைகள்’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

12) விபத்து, நெரிசல், சாலைப்பணி, பாதை மூடல், ஸ்தம்பித்த வாகனம் மற்றும் சாலையில் உள்ள பொருள் போன்ற வழிப் பிரச்சனைகள் குறித்து புகாரளிக்க கூகுள் மேப்ஸ் அனுமதிக்கிறது, புகாரளிக்க நேவிகேஷன் பக்கத்தில் ‘+’ ஐகானைத் க்ளிக் செய்யவும்.

13) நீங்கள் செல்ல விரும்பும் இடங்களின் விருப்பப் பட்டியலை கூகுள் மேப்ஸில் சேமித்து வைத்து கொள்ளலாம்.  ‘வாண்ட் டு கோ’ என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் செல்ல விரும்பும் இடங்களை சேர்க்கலாம்.

14) கூகுள் மேப்ஸ் பயனர்கள் சமீபத்தில் சென்ற இடங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது, அந்த கருத்துக்களை மற்ற பயனர்கள் பார்த்து மதிப்பீடு செய்யவும் முடிகிறது.

15) கூகுள் மேப்ஸ் உங்களது தாய் மொழியிலே இயக்கிக்கொள்ள அனுமதியை வழங்குகிறது, இதற்கு செட்டிங்ஸ் சென்று அதில் மொழி ஆப்ஷனுக்கு சென்று விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கலாம், குரல் வெளியான தேடலையும் நீங்கள் விரும்பும் மொழியில் இயக்கி கொள்ளலாம்.

Recent News