Thursday, January 23, 2025
HomeLatest Newsநடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகொப்டர்கள்; நால்வர் உயிரிழப்பு

நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகொப்டர்கள்; நால்வர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் இன்று இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம்இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்ந நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட்கோஸ்ட் நகர சுற்றுலாத்தலத்தில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிமான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சிக்கிய ஒரு ஹெலிகொப்டர் கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்ததுடன் அதன் விசிறிகள் சற்று தொலைவில் கிடந்தன.

இதேவேளை மற்றொரு ஹெலிகொப்டர் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News