Thursday, April 24, 2025
HomeLatest Newsஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - குளிரால் உறைந்த நகரங்கள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – குளிரால் உறைந்த நகரங்கள்

சக்திவாய்ந்த புயல்  ஒன்று  தெற்கு அமெரிக்காவில் சூறாவளியை உருவாக்கியதோடு,  அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Recent News