Wednesday, December 25, 2024
HomeLatest Newsயாழில் கொட்டித் தீர்த்த மழை (படங்கள் இணைப்பு)

யாழில் கொட்டித் தீர்த்த மழை (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் இரவு பெய்த மழையினால் வல்வெட்டித்துறை பிரதேசத்தில்  வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ள நீரினால்  நிரம்பி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.

அந்தவகையில் ஆலய வளாகங்கள் ,பாடசாலைகள்,வீதிகள் என பலவேறுபட்ட இடங்களில் இவ்வாறு நீர் நிரம்பி காணப்படுவதால்  மக்களின் அன்றாட வாழ்க்கை ,முடங்கியுள்ளது.

மேலும் இந்த மழை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Recent News