ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம் பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாயிக் தெரிவித்துள்ளார்.
கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகினர், 27 பேர் காயமடைந்துள்ளனர்.பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன்,உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பல முக்கிய சாலைகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.