Saturday, November 23, 2024
HomeLatest NewsIndia Newsஇறந்த உடலுடன் உடலுறவு கொள்வது குற்றமன்று...!நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது குற்றமன்று…!நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும் சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு,இயற்கைக்கு மாறான உடலுறவு போன்ற சட்டப்பிரிவுக்குள் இந்த குற்றம் அடங்காது என்றும் கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்ற நபர், ,இளம்பெண் ஒருவரை கொலை செய்த பின்னர் அந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இந்த வழக்கு துமகூரு நீதிமன்ற விசாரணைக்கு வந்த வேளை , ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டமைக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆயினும், இந்த தீர்ப்பினை எதிர்த்து ரங்கராஜ் மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் அண்மையில் விசாரணைக்கு எடுத்து தீர்ப்பும் வழங்கியுள்ளது.

அந்த வகையில், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகள் இந்த குற்றத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி, சடலத்துடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகவே, இறந்த உடலுடன் உடலுறவு கொண்ட வழக்கில் குற்றவாளி ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

Recent News