Sunday, January 26, 2025
HomeLatest Newsவெறுக்கப்படும் நாள் திங்கட்கிழமை: கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வெறுக்கப்படும் நாள் திங்கட்கிழமை: கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும்.

உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது.

பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று ‘திங்கள்’ சோகம் பகிரப்பட்டது.

“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர்வாசிகள் தங்கள் கருத்துகளை நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Recent News