Thursday, January 23, 2025

சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேங்க் ஆஃப் பரோடா வங்கி.பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) சீனியர் சிட்டிசன்களுக்காக பிரத்யேகமாக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, பேங்க் ஆட் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold) என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த ஆப் முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி, பயன்பாடு மற்றும் நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சீனியர் சீட்டிசன்கள் இந்த ஆப் மூலம் வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்த முடியும் என பேங்க் ஆஃப் பரோடா கூறுகிறது.

இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைமை அதிகாரி சஞ்சீவ் சத்தா, “சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான தேவைகள் உள்ளன. எனவே அவர்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை வேண்டும்.

சீனியர் சிட்டிசன்களின் தேவையை கருத்தில் கொண்டு வோர்ல்ட் கோல்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.சுருக்கமாக சொன்னால், சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்தான் வோர்ல்ட் கோல்ட். எளிமையான லுக், பெரிய எழுத்துகள், போதிய இடைவெளி, தெளிவான மெனு என சீனியர் சிட்டிசன்களின் வசதிக்கு ஏற்ப ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவின் வோர்ல்ட் கோல்ட் ஆப்பில் 250க்கு மேற்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு தேவையான சேவைகள், முதலீடு போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சேவைகள் சார்ந்த வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதனைப்பற்றி மேலதிக தகவலை அறிந்துகொள்வதற்கு மேலே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos