சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்திற்கு அழைத்து சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன் ஊடாக அவர்கள் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்
இவ்வாறு நாளாந்தம் சுமார் 1000 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர சுற்றுலாத்துறை அமைச்சினால் வழங்கப்படும் கடிதத்தைக் கொண்டும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும். சில சுற்றுலாத்துறைசார் ஊழியர்கள் தமது தொழில் அடையாள அட்டையை மாத்திரம் காண்பித்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர்.
அதேவேளை எதிர்வரும் 10 – 12 ஆம் திகதிகளுக்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என்று எண்ணுகின்றோம். அதன் பின்னர் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அத்தோடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள பெருமளவான பக்தர்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதம் சுற்றுலா பருவ காலம் என்பதால் குறித்த காலப்பகுதியிலும்
அதிகளவான சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.