பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அவருடன் இணைந்தோம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாம் எடுத்த விசேட தீர்மானம் மற்றும் எதிர்வரும் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தினர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் தற்போதும் எந்தவொரு மாற்றமும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளையும் ரணில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை என்றும் நாட்டை காப்பாற்றவே வந்ததாகவும் அவர் கொழும்பு கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் தெரிவிப்பதாக கூறினார்.