Wednesday, December 25, 2024
HomeLatest Newsபுற்று நோயை பொருட்படுத்தாமல் தீவிர முயற்சி..!தங்கம் வென்ற மூதாட்டி..!

புற்று நோயை பொருட்படுத்தாமல் தீவிர முயற்சி..!தங்கம் வென்ற மூதாட்டி..!

கனடாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் நீச்சல் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை தன்வசமாக்கியுள்ளார்.

கியூபெக்கைச் சேர்ந்த லினா கோர்டோயிஸ் என்ற மூதாட்டியே இவ்வாறு நீச்சல் போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளார்.

கல்கரியில் நடைபெற்ற கனடிய சிரேஸ்ட அழகியல் நீச்சல் போட்டித் தொடரில் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.

ஒரு புறம் புற்று நோய்க்கான சிகிச்சையும் மறுபுறம் நீச்சல் பயிற்சியும் என அதிக மன வலியுமையுடன் இந்தப் பெண் போட்டியில் பங்குபற்றி வெற்றிகளை தன்வசமாக்கி வருகின்றார்.

100 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை லினா வென்றெடுத்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து லினாவின் பயிற்றுவிப்பாளர், அவர் எந்நேரமும் சிரித்துக் கொண்டே தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தமையே இந்த வெற்றிக்கான காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

Recent News