அமெரிக்காவில் நிலவிவரும் கடும் வெப்பத்தினால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவாகி வருகின்றது.
இந் நிலையில், கென்சாஸ் மாகாணத்தில், கடும் வெப்பம் காரணமாக, அங்கு உள்ள பண்ணை ஒன்றில், 2 ஆயிரம் கால்நடைகள் உயர்ந்துள்ளன.
இது குறித்த காணொளி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.