Monday, December 23, 2024
HomeLatest NewsIndia Newsவிபத்தில் கைகளை இழந்தவருக்கு மீண்டும் பொருத்தப்பட்ட கை !மருத்துவர்கள் படைத்த சாதனை !

விபத்தில் கைகளை இழந்தவருக்கு மீண்டும் பொருத்தப்பட்ட கை !மருத்துவர்கள் படைத்த சாதனை !

டெல்லியில் விபத்தில் இரண்டு கைகளை இழந்த பெயிண்டர் ஒருவருக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவொன்று மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்துள்ளது.பெயிண்டர் ஒருவர் அவரது மூலதனமான தனது இரு கைகளையும், 2020 ல் நடந்த ரயில் விபத்து ஒன்றில் இழந்துள்ளார். அதன் பிறகு அவரது வாழ்க்கை வெறுமையாகி உள்ளது.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் பள்ளி ஒன்றின் முன்னாள் நிர்வாக தலைவரான மீனா மேத்தா என்பவர் விபத்து ஒன்றில் மூளை சாவு அடைந்துள்ளார்.

இவர் தனது இறப்பிற்கு பிறகு உடல் உறுப்புகள் தானம் கொடுக்க ஏற்கெனவே சம்மதித்திருந்ததால், உறவினர்களின் அனுமதியுடன் இவரது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டது.
அதேபோல் மீனா மேத்தாவின் இரு கைகள் அகற்றப்பட்டு, விபத்தில் கைகளை இழந்த பெயிண்டருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Recent News