இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அந்த வீடியோவில் இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
வேன், ஜீப் உள்பட பல வாகனங்களில் பெண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காணப்பட்டன. அந்த வீடியோவில் துப்பாக்கிகளுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டுவதும் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர்.
இந்த செயலுக்காக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுத்தே தீர வேண்டும்.
எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்கள் அதிகபட்ச அதிரடிகளில் ஈடுபடுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.