Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகைதிகள் பரிமாற்றத்திற்கு ஈடாக ஒரு வார இடைநிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ் …!

கைதிகள் பரிமாற்றத்திற்கு ஈடாக ஒரு வார இடைநிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ் …!

எகிப்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கை,பரிமாற்றபடுகின்ற கைதிகளுக்கு ஈடாக ஒரு வாரத்திற்கு சண்டையை நிறுத்துவதற்கான இஸ்ரேலிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாகக் கூறுகிறது.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே புதனன்று, கெய்ரோவில் உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒரு பயணத்தின் போது காசாவிற்கு, போர் நிறுத்தம் மற்றும் கூடுதல் மனிதாபிமான உதவிகளைப் பெற வந்ததாகத் தெரிவித்தார்.

புதனன்று அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், ஹமாஸ் அதிகாரி காசி ஹமாத்,
போரை நிறுத்துவதே குழுவின் “முன்னுரிமை” என்றார். “எங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது; நாங்கள் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினர், சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு சண்டையில் இடைநிறுத்தங்களை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் குழு அதற்கு உடன்படாது என்று கூறினார். “இஸ்ரேல் பணயக்கைதிகளின் விடுதலைக்கு பிறகு , எங்கள் மக்களுக்கு எதிராக ஒரு புதிய சுற்று படுகொலைகளைத் தொடங்குவார்கள்,” “நாங்கள் இந்த விளையாட்டை விளையாட மாட்டோம்.” என்றும் அவர் கூறினார்

Recent News