Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஅல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் கைது - இஸ்ரேலிய குற்றச்சாட்டுகளை மறுத்த ஹமாஸ் அமைப்பு..!

அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் கைது – இஸ்ரேலிய குற்றச்சாட்டுகளை மறுத்த ஹமாஸ் அமைப்பு..!

நேற்றிரவு ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், அல்-ஷிஃபா மருத்துவமனையில்
ஹமாஸ் இயக்க உறுப்பினர்களை இஸ்ரேலிய வீரர்கள் கைது செய்ததாகக் கூறிய
இஸ்ரேலிய ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் மறுத்துள்ளது.

இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்களில்
பெரும்பாலோர் கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள்
மருத்துவமனைக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் என்று ஹமாஸ் மேலும் சுட்டிக்காட்டியது. ஏனையவர்கள் அனைவரும் வெறும் பொதுமக்கள் மட்டுமே எனவும் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியான கொடூரங்களிலிருந்து தப்பி மருத்துவ வளாகத்திற்குள் தஞ்சமடையும் மக்கள் மீது ஹமாஸ் போராளிகள் என பழி போடுவதை அவர்கள் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு காஸாவில் உள்ள அரசாங்கம் இஸ்ரேலின் இராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மருத்துவமனைக்குள் 13 நோயாளிகளை
வேண்டுமென்றே கொன்றதாகவும் குற்றம் சாட்டியது. unrwa மீது பொய் பழி போட்டதை போல ஹமாஸ் மீதும் தற்போது பழிபோடுவதாகவும் வீண் பழி போடுவதில் இஸ்ரேலியர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதாகவும் ஹமாஸின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News