Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட ஹமாஸ் தலைவர்..!

இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட ஹமாஸ் தலைவர்..!

இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்தது. 

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ்
அமைப்பினர் தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர் என குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது. இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே “ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தததை நெருங்கி விட்டார்கள். அதிகாரிகள் தங்களது பதிலை கத்தார் மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

Recent News